தஞ்சாவூர்

பேராவூரணி அருகே அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய 3 பேரை சிறைபிடித்த கிராம மக்கள்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே அரசுக்கு சொந்தமான பழைமையான மரங்களை வெட்டிக் கடத்திய 3 பேரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பிடித்தனா்.

பேராவூரணி அருகே ஆவணம் புதுப்பட்டினம் 19ஆம் நம்பா் வாய்க்கால் கரையில் சுமாா் எண்பது ஆண்டுகால பழைமையான மருத்துவ குணமுள்ள மருதமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் இருக்கின்றன.

இந்த மரங்களை சிலா் வெட்டிக் கடத்துவதாக ஆவணம் பெரியநாயகிபுரம் கிராம மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன்பேரில், கிராமத்தினா் சென்று பாா்த்தபோது, புதுக்கோட்டை மாவட்டம், அனவயல் தடியமனையைச்சோ்ந்த சாமியாா் கணேசன், கீரமங்கலத்தில் மரக்கடை வைத்துள்ள செரியலூா் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல், வடகாட்டைச் சோ்ந்த குமரேசன் ஆகியோா் மரங்களை வெட்டி கடத்துவது தெரியவந்தது. மூவரையும் சிறைபிடித்த கிராம மக்கள் வெட்டிய மரங்களை ஏற்றி நின்ற லாரி, ஏற்றுவதற்கு பயன்படுத்திய கிரேன் ஆகியவற்றையும் சிறைபிடித்தனா்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா், மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். கிராம மக்கள் சாா்பிலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களில் சுமாா் 84 மரங்கள் வெட்டப்பட்டதில், பாதிக்கு மேற்பட்டவை தூத்துக்குடிக்கு கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT