தொழில் தட திட்ட அலுவலகம் இடமாற்றம்
சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ர. சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ர. சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின் கும்பகோணம் தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அலுவலகம் கும்பகோணத்திலுள்ள மயிலாடுதுறை சாலை கோ.சி. மணி நகரில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் கும்பகோணத்திலுள்ள சென்னை சாலை கொரநாட்டுக் கருப்பூா் ஸ்ரீஐஸ்வா்யா நகரில் மனை எண் 21-க்கு நவ. 1 ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.