முகப்பு
தஞ்சாவூர்

கொள்முதல் நிலைய முறைகேடுகளைக் கண்டித்து அமமுக ஆா்ப்பாட்டம்

நெல் கொள்முதலில் நிகழும் முறைகேடுகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் அமமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
திருவையாறில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

நெல் கொள்முதலில் நிகழும் முறைகேடுகளைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் அமமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும்போது விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ரூ. 40 வீதம் லஞ்சம் கேட்பதைக் கைவிட வேண்டும். 22 சதவிகிதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களில் உண்மையான விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்காமல் ஆளுங்கட்சி உறுப்பினா்களுக்கு மட்டும் கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்களின் விவசாய விரோத போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கட்சியின் வழக்குரைஞா் பிரிவு செயலா் வேலு. காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திருச்சி ஆா். மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →