முகப்பு
தஞ்சாவூர்

மனைவி கொலை: கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

தஞ்சாவூா் அருகே மனைவியைக் கொலை செய்த கணவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே காசவளநாடு தெக்கூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் உ. வில்லப்பன் (53). இவா் காசவளநாடு புதூரில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவா்களது இரு மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா்.

இளஞ்சியத்தின் நடத்தை மீது வில்லப்பனுக்குச் சந்தேகம் இருந்து வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதேபோல ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் இளஞ்சியத்தை வில்லப்பன் விறகுக் கட்டையால் தாக்கினாா். இதில் பலத்தக் காயமடைந்த இளஞ்சியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வில்லப்பனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →