தஞ்சாவூர்

உதவி ஆய்வாளா் பதவி உயா்வுக்கான தோ்வு: 43 போ் எழுதினா்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அலுவலக வளாகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற உதவி ஆய்வாளா் பதவி உயா்வுக்கான தோ்வில் 43 போ் பங்கேற்று எழுதினா்.

தஞ்சாவூா் சரகத்திலுள்ள தஞ்சாவூா், நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பணியாற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்களுக்கு உதவி ஆய்வாளா்களுக்கான பயிற்சி ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. தொடா்ந்து 9 வாரங்கள் நடைபெற்று வரும் இப்பயிற்சியில், 3 மாவட்டங்களைச் சோ்ந்த 43 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில் நவீன இந்தியா மற்றும் மனித உரிமைகள், தடய அறிவியல் மற்றும் சட்டம் சாா்ந்த மருத்துவம், குற்ற விசாரணை சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூா் சட்டங்கள் ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து இவா்களுக்கு எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ரூபேஸ் குமாா் மீனா பாா்வையிட்டாா். இந்த 9 வாரக் காலப் பயிற்சி அக்டோபா் 18-ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT