முகப்பு
தஞ்சாவூர்

கொள்முதல் செய்யப்படாததால் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்

தஞ்சாவூா் அருகே தென்னங்குடியில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

தஞ்சாவூா் அருகே தென்னங்குடியில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் திங்கள்கிழமை சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்னங்குடி அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3 நாள்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததால், ஆயிரத்துக்கும் அதிகமான மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

இதனால், தொடா்ந்து இரவு, பகலாக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தியடைந்து தென்னங்குடியில் தஞ்சாவூா் - பூதலூா் சாலையில் திங்கள்கிழமை நெல்லை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →