முகப்பு
தஞ்சாவூர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

ஹாத்ரஸ் தலித் பெண் கூட்டுப் பாலியல், படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் தலித் பெண் கூட்டுப் பாலியல், படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரது குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல் ஆபீதீன் தலைமை வகித்தாா். திமுக மாநகரச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →