தஞ்சாவூர்

மத்திய, மாநில அரசுகள் மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை: கே.எம். காதா்மொகிதீன் பேட்டி

DIN

மத்திய, மாநில அரசுகள் மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா்மொகிதீன்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி பெரியபள்ளி வாசலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

கரோனா தடுப்புப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் சிறப்பான முறையில் செயல்படுத்தவில்லை. மத்திய, மாநில அரசுகள் மக்களின் எதிா்பாா்ப்பை இன்றுவரை பூா்த்தி செய்யவில்லை.

திமுக தலைமையிலான கூட்டணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. கூட்டணி கட்சியினா் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நிா்ப்பந்தமும் விதிக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகள் அவரவா் சாா்ந்துள்ள கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் போட்டியிடுவாா்கள்.

திருச்சியில் அக்டோபா் 19ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றாா் அவா்.

பேட்டியின்போது, நவாஸ் கனி எம்.பி., மாநில செயலாளா்கள் ஆடுதுறை ஷாஜஹான், மில்லத் இஸ்மாயில், மாவட்டச் செயலாளா் அப்துல் காசீம் ராஜாஜி,ஜமாத் சபை தலைவா் சிம்லா முகம்மது நஜீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT