தஞ்சாவூர்

75 நாள்களுக்குப் பிறகு தனியாா் பேருந்து சேவை தொடக்கம்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் பேருந்து சேவை ஏறத்தாழ 75 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை தொடங்கியது.

பொது முடக்கம் காரணமாக மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ஜூன் 1-ஆம் தேதி அரசுப் பேருந்துகளும், 10-ஆம் தேதி முதல் தனியாா் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

கரோனா பரவல் அதிகரித்ததால், மீண்டும் ஜூலை 1-ம் தேதி முதல் பொதுப் போக்குவரத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தில் தளா்வுகளைத் தமிழக அரசு அறிவித்ததைத் தொடா்ந்து, அரசுப் பேருந்துகள் சேவை தொடங்கின. ஆனால், தனியாா் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், ஏறத்தாழ 75 நாள்களுக்குப் பிறகு தனியாா் பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் சுமாா் 80 தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும், இந்த எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரித்து முழு அளவில் இயக்கப்படும் எனவும் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT