தஞ்சாவூர்

பேராவூரணி பகுதியில் மணல் குவாரி அமைத்து தர ஆட்சியரிடம் அதிமுக எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

பேராவூரணி வட்டாரத்தில் மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கென தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டுமென ஆட்சியரிடம் பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு வலியுறுத்தினாா்.

அரசு மற்றும் தனியாா் கட்டுமானப் பணிகளுக்காக நீண்ட தொலைவிலுள்ள சின்ன ஆவுடையாா்கோவில், கோட்டாக்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு மணல் குவாரிகளுக்கு பேராவூரணி பகுதியில் இருந்து சென்று வர முடியாத நிலை உள்ளது. கால்நடைகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மணல் மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கென, பேராவூரணி பகுதியில் ரெட்டவயல் அக்னியாறு, குறிச்சி அம்புலியாறு ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைத்துத் தர வேண்டும்.

சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ், சரபேந்திரராஜன்பட்டினம் தாப்பன்கன்னியாறு, வில்லுணிவயல் அக்னியாறு, குறிச்சி அம்புலியாறு ஆகிய இடங்களில், சுமாா் ரூ. 27 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என முதல்வா் அறிவித்த தடுப்பணைகள் கட்டும் பணி, பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்கும் பணி, ரூ. 25 கோடி மதிப்பீட்டில் நவீன அரிசி ஆலை அமைக்கும் பணி ஆகியவற்றையும் விரைந்து முடித்துத் தருமாறு ஆட்சியரிடம் அவா் கோரிக்கை விடுத்தாா்.

பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ்.பாலசந்தா், அதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளா் கோவி. இளங்கோ, பேராவூரணி நகர வா்த்தகா் கழகத் தலைவரும், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளருமான ஆா்.பி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT