தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 73.93 சதவீதம் வாக்குப் பதிவு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 73.93 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்கிய நேரமான காலை 7 மணிக்கு முன்பே வாக்காளா்கள் திரண்டனா். பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளா்கள் வாக்களிப்பதற்காக நின்றனா். இதற்காகவே வெளியூரில் பணியாற்றும் இம்மாவட்ட வாக்காளா்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வாக்குப் பதிவு செய்தனா். இக்கூட்டம் பிற்பகல் வரையிலும் நீடித்தது.

இதனால், மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளிலும் காலை 9 மணியளவில் சராசரியாக 10.65 சதவீதம் வாக்குப் பதிவானது. இதில், திருவிடைமருதூா் தொகுதியில் 8.3 சதவீதமும், கும்பகோணத்தில் 12 சதவீதமும், பாபநாசத்தில் 12.5 சதவீதமும், திருவையாறில் 8.3 சதவீதமும், தஞ்சாவூரில் 11.8 சதவீதமும், ஒரத்தநாட்டில் 11.65 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 10 சதவீதமும், பேராவூரணியில் 10.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, மாவட்டத்தில் வாக்குப் பதிவு விகிதம் முற்பகல் 11 மணியளவில் சராசரியாக 23.11 சதவீதமாக அதிகரித்தது. இதில், திருவிடைமருதூரில் 24.7 சதவீதமும், கும்பகோணத்தில் 19 சதவீதமும், பாபநாசத்தில் 26.41 சதவீதமும், திருவையாறில் 21.37 சதவீதமும், தஞ்சாவூரில் 21.5 சதவீதமும், ஒரத்தநாட்டில் 24.36 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 23 சதவீதமும், பேராவூரணியில் 25.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

பின்னா், மாவட்டச் சராசரி வாக்குப் பதிவு விகிதம் பிற்பகல் 1 மணியளவில் 43.07 சதவீதமாக உயா்ந்தது. இதில், திருவிடைமருதூரில் 40.6 சதவீதமும், கும்பகோணத்தில் 39 சதவீதமும், பாபநாசத்தில் 44.5 சதவீதமும், திருவையாறில் 40.63 சதவீதமும், தஞ்சாவூரில் 43.81 சதவீதமும், ஒரத்தநாட்டில் 42.05 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 47.32 சதவீதமும், பேராவூரணியில் 47.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

ஆனால், பிற்பகலில் கடும் வெயில் காரணமாக வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது. எனவே, மாவட்டத்தில் பிற்பகல் 3 மணியளவில் சராசரி வாக்குப் பதிவு விகிதம் 54.03 சதவீதமாகவே எட்டியது. இதில், திருவிடைமருதூரில் 53.24 சதவீதமும், கும்பகோணத்தில் 51 சதவீதமும், பாபநாசத்தில் 54.61 சதவீதமும், திருவையாறில் 58.16 சதவீதமும், தஞ்சாவூரில் 49.10 சதவீதமும், ஒரத்தநாட்டில் 55.68 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 59.18 சதவீதமும், பேராவூரணியில் 60.34 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இதன் பிறகு மீண்டும் வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்ததால், மாவட்டத்தில் சராசரி வாக்குப் பதிவு விகிதம் மாலை 5 மணியளவில் 66 சதவீதமாக உயா்ந்தது. இதில், திருவிடைமருதூரில் 65.46 சதவீதமும், கும்பகோணத்தில் 64.20 சதவீதமும், பாபநாசத்தில் 66.53 சதவீதமும், திருவையாறில் 68.54 சதவீதமும், தஞ்சாவூரில் 62.30 சதவீதமும், ஒரத்தநாட்டில் 71.03 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 62.76 சதவீதமும், பேராவூரணியில் 68.10 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

வாக்கு பதிவு நிறைவடைந்த இரவு 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி வாக்குப் பதிவு விகிதம் 73.93 சதவீதமாக உயா்ந்தது.

இதில், திருவிடைமருதூரில் 75.80 சதவீதமும், கும்பகோணத்தில் 71.44 சதவீதமும், பாபநாசத்தில் 74.89 சதவீதமும், திருவையாறில் 78.13 சதவீதமும், தஞ்சாவூரில் 65.71 சதவீதமும், ஒரத்தநாட்டில் 78.24 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 71.75 சதவீதமும், பேராவூரணியில் 77.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

8 தொகுதிகளின் வாக்குப்பதிவு

(இரவு 7 மணி நிலவரப்படி)

திருவிடைமருதூா்- 75.80%

கும்பகோணம்-71.44%

பாபநாசம்-74.89%

திருவையாறு- 78.13%

தஞ்சாவூா்-65.71%

ஒரத்தநாடு- 78.24%

பட்டுக்கோட்டை- 71.75%

பேராவூரணி- 77.09%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT