முகப்பு
தஞ்சாவூர்

குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்திகாலி குடங்களுடன் பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பாபநாசம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

பாபநாசம் அருகே குடிநீா் தட்டுப்பாட்டை களைய வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை 8ஆவது வாா்டுக்குள்பட்ட புத்தூா் கீழதோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதிக்கு அம்மாபேட்டை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால், இந்தப் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தப் பகுதியினா் குடிநீருக்காக நீண்ட தொலைவு சென்றாலும், முழுமையாக குடிநீா் பெற முடியாத நிலையே உள்ளது. எனவே, பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புத்தூா் கீழதோப்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →