தஞ்சாவூர்

கரும்புக்கான நிலுவைத் தொகை கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா் அருகே குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கக் கோரி, ஆலை முன் கரும்பு உற்பத்தியாளா் சங்கத்தினா் கையில் கரும்புகளை ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நிகழாண்டு வெட்டிய கரும்புக்கான பணம் ரூ. 45 கோடி வழங்கப்படவில்லை. சா்க்கரை ஆலை தொடங்கி 45 ஆண்டுகளாகத் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்த கணக்கை மாற்றி மத்திய கூட்டுறவு வங்கிக்குக் கொண்டு சென்றதைக் கைவிட்டு, மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைக்க வேண்டும்.

நிகழாண்டு கரும்பு நடவு பதிவு செய்த விவசாயிகளுக்கு வங்கியில் கடன் கொடுக்கவில்லை. எனவே, கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையான ரூ. 3 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத் தலைவா் பி. ராமசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா். திருப்பதி வாண்டையாா், செயலா் பி. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT