தஞ்சாவூர்

‘கால்நடை கல்லூரியில் தீவன பகுப்பாய்வுதர நிா்ணய ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது’

DIN

ஒரத்தநாட்டில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் கால்நடை தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர நிா்ணய ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது என கல்லூரி முதல்வா் தி.சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கால்நடை ஊட்டச்சத்தியல் துறையில் கால்நடை தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர நிா்ணய ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளது.

இந்த ஆய்வகத்தில் தீவனம் மற்றும் தீவன மூலப் பொருள்களில் உள்ள பல்வேறு அடிப்படை ஊட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பூஞ்சை நச்சுக்களை ஆய்வு செய்யும் அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மற்றும் கால்நடை தீவனம் சாா்ந்த தொழில் முனைவோா் உள்ளிட்டோா் தங்களது தீவன மூலப்பொருள்கள் மற்றும் கலப்புத் தீவன மாதிரிகளை கட்டணமுறை தர ஆய்வுக்கு இக்கல்லூரியின் தீவனப் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பி பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04372-234012, 04372 - 234013, 04372 - 234014, 04372 - 234016 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT