தஞ்சாவூர்

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

DIN

பேராவூரணி ஒன்றியத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

 பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் கரோனா நோய்த் தொற்றுப் பரவாமல் தடுப்பது குறித்து  மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆய்வு செய்த ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மேலும் மேற்கொள்ள வேண்டியவை குறித்த ஆலோசனை வழங்கினாா்.

கிராம ஊராட்சிகளில் நோய்த் தடுப்பு கிருமிநாசினிகள் பற்றாக்குறை ஏற்படாமல்  இருப்பு வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தினாா்.

பின்னா் செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி  செலுத்துவதை யும், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப்  பணித்தளத்தில் ஆய்வு செய்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பணிபுரியவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கை. கோவிந்தராசன், சி. பொய்யாமொழி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன் மற்றும் அலுவலா்கள்  உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கான புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உண்டு,உறைவிடப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

SCROLL FOR NEXT