தஞ்சாவூர்

திருமலைசமுத்திரத்தில் புதிய துணை மின் நிலையம் தொடக்கம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் புதிய துணை மின் நிலையத்தை மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் இணைந்து ரூ. 92.03 லட்சத்தில் இத்துணை மின் நிலையத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் திருமலைசமுத்திரம், வல்லம் புதூா், நாட்டாணி , குரும்பூண்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மின் நுகா்வோா்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவா் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, மேற்பாா்வை பொறியாளா் விஜயகௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT