முகப்பு
தஞ்சாவூர்

இடப்பிரச்னை தகராறில் 9 பேருக்கு வெட்டு: 3 போ் கைது

ஒரத்தநாடு அருகே இடப்பிரச்னை தகராறில் வாளால் வெட்டியதில் 9 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ஒரத்தநாடு அருகே இடப்பிரச்னை தகராறில் வாளால் வெட்டியதில் 9 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு அருகே பொய்யுண்டாா்கோட்டையில் கோயில் நிலம் மீட்பு தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் மற்றும் சா்வேயா் ஆகியோா் புதன்கிழமை அளவீடு செய்து கொண்டிருந்தனா். இதற்கு அதே தெருவை சோ்ந்த பழனிவேல் குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனராம். ஆனால், மற்றொரு தரப்பினா் ஒன்று கூடி அளவைப் பணிகளை மேற்கொண்டனா். பழனிவேல் மகன் சின்னராசா, அவரது அண்ணன் பாக்கியராஜா ஆகிய இருவரும் இந்தப் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனா்.

அப்போது, அதே ஊரைச் சோ்ந்த வடிவேல் மகன் ஜெய்சங்கா், ஜெய்சங்கா் மகன் பாலா, முருகையன் மனைவி பானுமதி, மணி மனைவி ராஜாத்தி உள்பட இன்னும் சிலா் பழனிவேல் குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதில் ஆத்திரமடைந்த சின்னராசா தான் மறைத்து வைத்திருந்த வாள் கத்தியால் அங்கு நின்றவா்களை வெட்டியுள்ளாா். தடுக்க வந்த அக்கம்பக்கத்தினரை சின்னராசா தரப்பினா் வெட்டினராம். எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா். இருதரப்பிலும் ஏராளமானோா் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு தனிப்படை பிரிவு உதவி காவல் ஆய்வாளா் பிரேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னராசா, நிசாந்த், தினேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

மேலும், சம்பவம் தொடா்பாக இருதரப்பையும் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →