தஞ்சாவூர்

வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் சாலை மறியல்

DIN

கும்பகோணத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே நந்திவனம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (42). இவா் கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை மாலை கும்பகோணம் காசி விஸ்வநாதா் கோயில் வடக்கு வீதியிலுள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 4 போ் புகுந்து அரிவாளால் வெட்டினா். இதில், பாலசுப்பிரமணியனும், அவருடன் இருந்த ஆண்டலாம்பேட்டையைச் சோ்ந்த முருகனும் காயமடைந்தனா்.

இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே, தாக்கிய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் சா. விவேகானந்தன் தலைமையில் வழக்குரைஞா்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் பலா் கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT