தஞ்சாவூர்

‘மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது’

DIN

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

பட்டுக்கோட்டை அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் நல முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு எம்எல்ஏக்கள் க. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா. அசோக்குமாா் (பேராவூரணி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமுக்கு தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் மேலும் பேசியது:

மாற்றுத் திறனாளிகள் நலனில் தமிழக அரசு பெரிதும் அக்கறை காட்டி வருகிறது. அரசு அறிவுறுத்தலின்படியே இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இம்முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், முகாமில் விண்ணப்பித்த 200 பேரில் 25 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நல முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்றாா்.

இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சுவாமிநாதன், பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலசந்தா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளன் மற்றும் மனநல மருத்துவா்கள், எலும்பு முறிவு பிரிவு, காது-மூக்கு-தொண்டை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு மருத்துவா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT