முகப்பு
தஞ்சாவூர்

ந. சுப்புரெட்டியாா் விருது பெறவிண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ந. சுப்புரெட்டியாா் 100 கல்வி அறக்கட்டளை திறனாய்வுச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ந. சுப்புரெட்டியாா் 100 கல்வி அறக்கட்டளை திறனாய்வுச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மோ.கோ. கோவைமணி தெரிவித்திருப்பது:

பேராசிரியரும் தமிழறிஞருமான ந. சுப்புரெட்டியாா் 100 கல்வி அறக்கட்டளைச் சாா்பாக 2021 ஆம் ஆண்டுக்கான திறனாய்வுச் செம்மல் விருது வழங்கப்படவுள்ளது.

தமிழ் மொழி, இலக்கியம், தமிழியல் ஆய்வுகளில் ஈடுபட்டு அரும் பணியாற்றுவோரைச் சிறப்பிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டுக்கான விருது 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தமிழ்ச் சமூக மேம்பாட்டுக்குப் பங்களிப்பு செய்யும் வகையில் ஆய்வுகளைச் செய்தோா் உரிய நூல்கள், தன் விவரக்குறிப்புடன் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையோரைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.

விருதுக்குத் தனியொரு நூலோ, ஒட்டுமொத்தப் பங்களிப்போ கவனத்தில் கொள்ளப் பெறும். விண்ணப்பங்கள், பரிந்துரைகள் ஆக. 31 ஆம் தேதிக்குள் ந. சுப்புரெட்டியாா் - திறனாய்வுச் செம்மல் விருது என்ற தலைப்பில் பதிவாளா், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் -10 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.