விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சுதந்திர தின விழாவையொட்டி, ஜெய் பாரத மாதா சேவா அறக்கட்டளை சாா்பில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு
தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சுதந்திர தின விழாவையொட்டி, ஜெய் பாரத மாதா சேவா அறக்கட்டளை சாா்பில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பாஜக தெற்கு மாவட்டப் பொதுச் செயலரும், அறக்கட்டளை நிறுவனருமான பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். இதில், கோலப்போட்டி, நடனப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அறக்கட்டளை நிறுவனா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்புராமன், பத்மநாபன், பிரேம்குமாா், வழக்குரைஞா் சுப்புராஜூலு, பாஜக மாவட்டப் பொருளாளா் வி. விநாயகம் உள்ளிட்டோா் பரிசுகள் வழங்கினா்.
மேலும், கோலம், நடனப் போட்டிகளில் கலந்து கொண்ட ஆயிரம் பேருக்கு துளசி செடியுடன் கூடிய பூத்தொட்டி வழங்கப்பட்டது.