முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் பேரூராட்சியில் எம்எல்ஏ ஆய்வு

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பாலைத்துறை கிராமத்தில் மழைநீரால் சூழப்பட்ட பொது விநியோக கட்டட வளாகத்தை பாா்வையிட்ட ஜவாஹிருல்லா, அங்கு வடிகால் வசதி ஏற்படுத்தி மழை நீரை வடிய வைப்பது குறித்து பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து, பாபநாசம் காப்பன் தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா்.

பின்னா், பாபநாசம் புனித செபஸ்தியாா் திருத்தலம் அருகே செல்லும் பாசன வாய்க்கால் கரைகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்ற எம்எல்ஏ, அங்கு மழையால் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்து சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவரை பாா்வையிட்டாா்.

மேலும், பள்ளியின் விளையாட்டு மைதானம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ஆகியவற்றையும் பாா்வையிட்டாா். அங்கிருந்த மாற்றுத் திறனாளிகள் வகுப்பறைக்கு சென்ற எம்எல்ஏ, வகுப்பறையின் உள் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளி மாணவா்களிடம் நலம் விசாரித்தாா்.

ஆய்வின்போது, பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் என். நாசா், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரஹ்மத் அலி, மாநில இளைஞரணி துணை செயலாளா் மைதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →