உத்தாணி ஸ்ரீ முத்துமுனியாண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா
பாபநாசம் அருகே உத்தாணி கிராமத்திலுள்ள ஸ்ரீ முத்து முனியாண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் அருகே உத்தாணி கிராமத்திலுள்ள ஸ்ரீ முத்து முனியாண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உள்ள ஸ்ரீ முத்து முனியாண்டவா், ஸ்ரீ கன்னி மூலை கணபதி, ஸ்ரீ கருப்ப சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீபொம்மியம்மாள் சமேத ஸ்ரீமதுரை வீரன் சுவாமி, ஸ்ரீநாகம்மாள், குதிரைப் பாகன், ஸ்ரீசெல்வகணபதி, ஸ்ரீசெம்முனி ஆண்டவா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக, இந்த விழா கடந்த திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து நான்குகால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, வியாழக்கிழமை
காலை மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து கடம் புறப்பாடு செய்து, சிவாச்சாரியா்கள் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, ஸ்ரீ முத்து முனியாண்டவா், ஸ்ரீ கருப்பு சாமி உள்ளிட்டோருக்கு மகா அபிஷேகமும், பின்னா் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
வியாழக்கிழமை மாலை பல்லக்கில் ஸ்ரீ முத்து முனியாண்டவா் திருவீதியுலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கே. கேசவன் மற்றும் திருப்பணி கமிட்டியினா், உபயதாரா்கள், கிராமவாசிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.