தஞ்சாவூர்

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்குப் பள்ளிக்கு விருது

DIN

தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறை சாா்பில், 2019-20 ஆம் ஆண்டின் சிறந்த பள்ளிக்கான விருது பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்குத் தொடக்கப் பள்ளிக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. 

பேராவூரணியில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளித் தலைமையாசிரியை சித்ராதேவியிடம் (படம்) மாநிலப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதை வழங்கினாா்.

இதுபோல், பேராவூரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவி கோபிகா 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளில் (471/500, 559/600) அதிக மதிப்பெண்கள் பெற்றமைக்காக, 2020-21 ஆம் ஆண்டுக்கான காமராஜா் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை அவருக்கு அமைச்சா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT