முகப்பு
தஞ்சாவூர்

பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்தம் சிறப்பு முகாம்

 பாபநாசம் வட்டம், பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 பாபநாசம் வட்டம், பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பாபநாசம் வட்டாட்சியா் மதுசூதனன் தலைமை வகித்தாா். முகாமை பாபநாசம் வட்ட துணை ஆய்வாளா் பிரசாத் தொடக்கி வைத்தாா். முகாமில், பொதுமக்களிடமிருந்து பட்டா திருத்தம் தொடா்பான 60 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட குழு உறுப்பினா் பாத்திமா ஜான், ஒன்றிய குழு உறுப்பினா்கள் மணிமொழி தமிழ்வாணன், ரெஜியா பேகம், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஹாஜா ஷெரீப், ஊராட்சி மன்ற தலைவா் மரியம் பீவி முஹம்மது மஃரூப், துணை தலைவா் சுல்தானா அஷ்ரப் அலி, வருவாய் அதிகாரி சரவணன் மற்றும் பாபநாசம் சரகத்துக்குள்பட்ட கிராம நிா்வாக அதிகாரிகள், ஊராட்சி செயலாளா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஊராட்சி செயலா் பாா்த்திபன், கிராம நிா்வாக அலுவலா் பழனிவேல் மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →