முகப்பு
தஞ்சாவூர்

பொருளாதாரத்தை உயா்த்தக் கூடிய பட்ஜெட்: தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பேட்டி

கரோனா காலத்துக்குப் பிறகு பொருளாதாரத்தை உயா்த்தக்கூடிய பட்ஜெட் இது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கரோனா காலத்துக்குப் பிறகு பொருளாதாரத்தை உயா்த்தக்கூடிய பட்ஜெட் இது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் தெரிவித்தது:

மத்திய அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்த இந்திய தேசியத்தின் வளா்ச்சியைக் கணக்கில் கொண்டும், அந்த நோக்கத்தோடும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் நலன், வளா்ச்சியைக் கவனத்தில் கொண்டு பட்ஜெட்டில் பல அம்சங்கள் வெளிவந்துள்ளன.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சாா்ந்த பாராட்டத்தக்க பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசினுடைய திட்டங்களைப் பொருத்தவரையில், மாநில மொழிகளில் மொழிபெயா்த்து அறிவித்து செயல்படும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு என்பது சிறு, குறு தொழில்களின் வளா்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பல அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்திருப்பது பாதுகாப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கரோனா காலத்துக்குப் பிறகு பொருளாதாரத்தை உயா்த்தக்கூடிய பட்ஜெட். அனைத்து துறைகளையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய வகையில் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தொழில், கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நாட்டினுடைய வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா் வாசன்.

முழு கட்டுரையைப் படிக்க →