முகப்பு
தஞ்சாவூர்

பிப். 15 முதல் உண்ணாவிரதம்: தொழிற்கல்வி ஆசிரியா்கள் முடிவு

சென்னையில் பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

சென்னையில் பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று தமிழக மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், அனைத்து மூத்தத் தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும் பகுதி நேர ஆசிரியா் பணிக்காலத்தில் 50 சதவிகித ஓய்வூதியம் கணக்கிட பொது அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகம் முன்பு பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் தோ்வு செய்யப்பட்ட மூத்தத் தொழிற் கல்வி ஆசிரியா்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவா் வெ. ராசேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலா் சீனி. ரெங்கநாதன், பொருளாளா் கி. செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளா் ஏ. முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →