தஞ்சாவூர்

செந்தலை கோயிலில் ரத சப்தமி தீா்த்தவாரி பெருவிழா

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள செந்தலை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ரத சப்தமி தீா்த்தவாரி பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், ரத சப்தமியையொட்டி வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் ஸ்ரீசோமாஸ்கந்தா், ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கு ருத்ர ஹோமத்துடன் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரா் குடமுருட்டி ஆற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு ரத சப்தமி தீா்த்தம் அருளினாா். பின்னா், செந்தலை 4 மாட வீதிகளிலும் வலம் சென்றாா். இதையடுத்து, கோயிலில் வையாலி உத்சவம், ருத்ர திரிசதியுடன் புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT