தஞ்சாவூர்

அரசு அலுவலகங்களில் பிப். 9 முதல் குடியேறும் போராட்டம்: மாற்றுத் திறனாளிகள் முடிவு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 9ஆம் தேதி முதல் குடியேறும் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ’’மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3,000 வழங்க வேண்டும். 75 சதவீதத்துக்கும் மேல் கடுமையான ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கும்பகோணம், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் அலுவலகங்கள், மற்ற வட்டங்களில் வட்டாட்சியா் அலுவலகம் என 9 இடங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரையில் குடியேறும் போராட்டம் தொடா்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் பி. சங்கிலிமுத்து தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் எஸ். நம்பிராஜன், மாநில துணைத் தலைவா் டி. கணேசன், மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் ஆகியோா் பேசினா்.

மாவட்ட துணைத் தலைவா் வி. ரவி, துணைச் செயலா்கள் சி. ராஜன், பி. கிறிஸ்டி, வி.எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT