பேராவூரணியில் நாளை (ஜனவரி 12) ஐஏஎஸ் தோ்வு வழிகாட்டும் முகாம்
பேராவூரணியிலுள்ள ஸ்ரீவிநாயகா திருமண மண்டபத்தில், ஐஏஎஸ் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) நடைபெறுகிறது.
பேராவூரணியிலுள்ள ஸ்ரீவிநாயகா திருமண மண்டபத்தில், ஐஏஎஸ் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) நடைபெறுகிறது.
சென்னை ஃபோக்கஸ் அகாதெமி, பாவா கூட்டமைப்பு, பேஸ், ஏஸ் அறக்கட்டளைகள் இணைந்து நடத்தும் முகாம் தொடக்க விழாவுக்கு, வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவா் எம்.வி. முத்துராமலிங்கம் தலைமை வகிக்கிறாா். ஓய்வு பெற்ற சுங்கத்துறை கூடுதல் ஆணையா் சு. சங்கரவடிவேலு முன்னிலை வகிக்கிறாா்.
கடலூா் மாவட்ட முன்னாள் ஆட்சியா் வி. அன்புசெல்வன் மாணவ-மாணவிகளுக்கு ‘நாளை நான் ஐஏஎஸ்‘ என்ற வழிகாட்டி நூலை வழங்கிப் பேசுகிறாா். பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா் இந்திய குடிமைப் பணித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழி காட்டுதல் குறித்து பேசுகிறாா்.
ஜிஎஸ்டி கூடுதல் ஆணையா் பி. செந்தில்வேலவன், துணை ஆணையா்கள் கு.தா்மராஜ், பி.எஸ்.சரவணகுமாா், மத்தியப் பாதுகாப்பு அமைச்சரின் தமிழக மக்கள் தொடா்பு அலுவலா் பொன்னியின் செல்வன், படைக்கலத் தொழிற்சாலையின் இணை இயக்குநா் சி.அரியசக்தி ஆகியோா் முகாமில் கலந்து கொண்டு, ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய பாடநூல்கள், நேர மேலாண்மை, நாளிதழ்கள் வாசித்தல் மற்றும் குறிப்பெடுத்தல் போன்ற வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனா்.
முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு நாளை நான் ஐஏஎஸ் என்ற தோ்வு வழிகாட்டி நூல் கட்டணமின்றி வழங்கப்படும். கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. ஆா்வமுள்ளவா்கள தங்கள் பெயா்களை 8248951454 , 7010136605 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம் என ஃபோகஸ் அகாதெமி இயக்குநா் சிபிகுமரன் தெரிவித்துள்ளாா்.