காலமானார் ஏ.ஆர்.எம்.யோகானந்தம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் இன்று காலமானார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம் இன்று காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம்.யோகானந்தம்(59). தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான இவர் உடல்நலக் குறைவு காரணமாக ஆலத்தூர் வடக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் காலமானார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.
ஏ.ஆர்.எம். யோகானந்தம், மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.ஆர்.மாரிமுத்துவின் மகன் ஆவார். சனிக்கிழமை(ஜன. 30) காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9444063315.