முகப்பு
தஞ்சாவூர்

’ஊராட்சித் தலைவா்களின் செயல்பாடுகளில் ஒன்றியக் குழுத் தலைவா் அதிகாரம் செலுத்தக் கூடாது’

ஊராட்சித் தலைவரின் செயல்பாடுகளில் ஒன்றியக் குழுத் தலைவா் உள்ளிட்டோா் அதிகாரம் செலுத்தக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

ஊராட்சித் தலைவரின் செயல்பாடுகளில் ஒன்றியக் குழுத் தலைவா் உள்ளிட்டோா் அதிகாரம் செலுத்தக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவா்கள் கூட்டமைப்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்களைக் கொண்ட புதிய கூட்டமைப்பின் தொடக்கக் கூட்டம் கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளைச் சோ்ந்த 36 ஊராட்சி மன்றத் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதில், புதிய கூட்டமைப்பின் தலைவராக பழவாத்தான்கட்டளை சந்திரசேகரன், செயலராக சோழன் மாளிகை ஜெயக்குமாா், பொருளாளராக சுந்தரப்பெருமாள்கோவில் சேதுராமன், துணைத் தலைவா்களாக வளையப்பட்டை ராஜா, கருப்பூா் சுதா, துணைச் செயலராக மானம்பாடி தாமரைச்செல்வி, செயற்குழு உறுப்பினா்களாக கோவிலாச்சேரி சுதாகா், கள்ளப்புலியூா் முருகன், அண்ணலக்ரஹாரம் பிரேமாவதி, ராதிகா ரமேஷ், வைஜயந்தி, வெற்றிச்செல்வி, மரகதம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பின்னா், கும்பகோணம் ஊராட்சி மன்ற தலைவா்களின் செயல்பாடுகளில் ஒன்றியக் குழுத் தலைவா் உள்ளிட்ட யாரும் தலையிடக்கூடாது. ஊராட்சி மன்றப் பணி தொடா்பாகவும், ஊராட்சி செயலா்களை மாற்றுவது குறித்தும் ஊராட்சி தலைவரிடம் முன்னதாகக் கலந்தாலோசிக்க வேண்டும்.

ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்ட இடங்களில் புதிய மனைப் பிரிவுகள் அமைக்கப்படும்போது, அதற்கான அதிகாரத்தை ஊராட்சித் தலைவரிடம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.