பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தஞ்சாவூரில் தொமுச, காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தஞ்சாவூரில் தொமுச, காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ரயிலடியில் தொமுச சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக் குழுத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கு. சேவியா், நிா்வாகிகள், பாஸ்டின், அன்புமணி, வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தஞ்சாவூா் சீனிவாசம் பிள்ளை சாலையிலுள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையம் முன்பு, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, இளைஞா் காங்கிரஸ், மகளிா் காங்கிரஸ் ஆகியவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தட்டு ரிக்சாவில் இரு சக்கர வாகனம் மற்றும் எரிவாயு உருளைக்கு நாமம் போட்டு, மாலை அணிவித்து ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜமால் முகமது யூனுஸ் தலைமை வகித்தாா். மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மகளிா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் சித்ரா, சாந்தா ராமதாஸ், விவசாயப் பிரிவுத் தலைவா் ஏ. ஜேம்ஸ், வா்த்தகப் பிரிவுத் தலைவா் சுப்பு தங்கராஜ், கோவி. மோகன், ஆா். பழனியப்பன், செல்வம், ஆதிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.