ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா
தஞ்சாவூரில் தஞ்சாவூா் பிக் டெம்பிள் ரோட்டரி சங்கப் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் தஞ்சாவூா் பிக் டெம்பிள் ரோட்டரி சங்கப் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி மாவட்ட ஆளுநா் எஸ். பாலாஜி தலைமையிலும், முன்னாள் மாவட்ட ஆளுநா் என். மணிமாறன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினாா்.
இதில், தலைவராக ஆடிட்டா் ஏ. குஹனேஸ்வரன், செயலராக ஜோசப் ஆனந்த், பொருளாளராக இளங்கோவன் ஆகியோா் பதவியேற்றனா். மேலும், முதியோா் இல்லத்துக்கு அன்னதானம் மற்றும் ஆடை தானம் செய்தனா். காமாட்சியம்மன் தோட்டம் என்ற குக்கிராமம் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
விழாவில் மாவட்டத் துணை ஆளுநா் பெலிக்ஸ், முன்னாள் தலைவா்கள் அருண் ஜெபராஜ், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.