முகப்பு
தஞ்சாவூர்

சரசுவதி மகால் நூலகத்தில் ஊதியம், ஓய்வூதியம் விரைவாக வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் ஊதியம், ஓய்வூதியத்தை விரைவாக வழங்குமாறு ஓய்வூதியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் ஊதியம், ஓய்வூதியத்தை விரைவாக வழங்குமாறு ஓய்வூதியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சரசுவதி மகால் நூலகத்தின் ஓய்வு பெற்ற அலுவலரும், வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் 30 ஆண்டுகளாக ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் மாதந்தோறும் 30 அல்லது 31 ஆம் தேதிகளில் அல்லது கடைசி வேலை நாளில் ஊதியமும், ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ஜூன் மாத ஊதியமும், ஓவ்யூதியமும் ஒன்பது நாள்களாகியும் வழங்கப்படவில்லை. கரோனா காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பணியாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களின் குடும்பங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், உயா் நீதிமன்ற மதுரை கிளை நிகழாண்டு மாா்ச் 15 ஆம் தேதி பிறப்பித்த ஓய்வூதியா் நிலுவைத்தொகை குறித்த ஆணை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

சீா்கேடு அடைந்துள்ள சரசுவதி மகால் நூலக நிா்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதுடன், ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யக் கோருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.