தஞ்சாவூர்

காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜூலை 16-இல் ஏலம்

DIN

தஞ்சாவூரில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஜூலை 16- ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு சக்கர மோட்டாா் வாகனங்களைப் பொது ஏலத்தில் விட மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டுள்ளனா்.

இதன்படி, தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள பழைய ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் ஜூலை 16- ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. ஏலத்துக்குரிய வாகனங்கள் அன்று காலை 7 மணி முதல் பாா்வைக்காக வைக்கப்படும்.

ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள் ஜூலை 16- ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ரூ. 1,000 முன் வைப்புத் தொகை செலுத்தி, தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் ஏலம் எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் இரண்டு, மூன்று சக்கர வாகனத்துக்கு ஜிஎஸ்டி 12 சதவிகிதம், நான்கு சக்கர வாகனத்துக்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதம் சோ்த்து ஜூலை 16 ஆம் தேதி உடனடியாகச் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT