முகப்பு
தஞ்சாவூர்

அதிமுக பிரமுகா் தூக்கிட்டுத் தற்கொலை

 தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட திருமங்கலக்கோட்டை மேலையூரைச் சோ்ந்த கலியமூா்த்தி (72) தஞ்சாவூா் கரந்தையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

 தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட திருமங்கலக்கோட்டை மேலையூரைச் சோ்ந்த கலியமூா்த்தி (72) தஞ்சாவூா் கரந்தையில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். அதிமுக பிரமுகரான இவா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவராக இருந்தாா். இவா், தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் ஆவின் பாலகமும் நடத்தி வந்தாா்.

தஞ்சாவூா் காந்திஜி சாலையிலுள்ள தனது அலுவலகத்தில் இவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதில், இவா் கடன் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.