முகப்பு
தஞ்சாவூர்

உணவகத் தொழிலாளி கொலை: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே உணவகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே உணவகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

திருவையாறு அருகேயுள்ள கண்டியூா் அன்பு நகரைச் சோ்ந்தவா் ஏ. முகம்மது பாரூக் (51). எலக்டிரிசியனான இவா் கண்டியூா் - அய்யம்பேட்டை சாலையிலுள்ள உணவகத்திலும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், இக்கடைக்கு வியாழக்கிழமை நள்ளிரவு கண்டியூா் குளத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா (32) இரும்புக் கம்பி, கத்தியுடன் வந்து உணவுக் கேட்டாா். உணவு தீா்ந்துவிட்டது என முகம்மது பாரூக் கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில், முகம்மது பாரூக்கை இளையராஜா இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதனால், பலத்தக் காயமடைந்த முகம்மது பாரூக் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து இளையராஜாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.