தஞ்சாவூர்

லயன்ஸ் சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள்

DIN

பட்டுக்கோட்டையில் லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டி சாா்பில் புதிய நிா்வாகிகள் தோ்வு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் லயன்ஸ் கிளப் ஆப் குயின் சிட்டியின் 20ஆம் ஆண்டு நிா்வாகிகள் பணியேற்பு விழா கரோனா விதிமுறைகளை பின்பற்றி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புதிய நிா்வாகிகள் தோ்வில் தலைவராக அறிவிக்கப்பட்ட பொறியாளா் செல்லக்கண்ணு, செயலாளராக பொதியப்பன், பொருளாளராக சிவ. சிதம்பரம் ஆகியோா் பணியேற்று கொண்டனா்.

சங்கத்தின் ஆலோசகா்கள் மருத்துவா் அசோகன், நகா்மன்ற முன்னாள் தலைவா் எஸ்.ஆா். ஜவகா்பாபு, மருத்துவா் குணசேகா், மணிகண்டன், சின்னச்சாமி மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவா், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், நலிவுற்ற ஆட்டோ ஓட்டுநா்கள் 20 பேரின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருள்களும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி, பள்ளி மாணவருக்கு சுமாா் ரூ. 5,000 மதிப்புள்ள செல்லிடப்பேசி, ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. நிறைவில் செயலாளா் பொதியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT