தஞ்சாவூர்

நெல் கொள்முதல் செய்ய கோரி அலிவலத்தில் விவசாயிகள் மறியல்

DIN

பட்டுக்கோட்டை அருகே அலிவலத்தில் முறையாக நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள அலிவலம் அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் அலிவலம், காயாவூா், சீதம்பாள்புரம், குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், கொள்முதல் நிலைய அதிகாரிகள் கடந்த 20 நாள்களாக விவசாயிகளிடம் ஈரப்பதம் மற்றும் நெல்லின் தரத்தை காரணம் கூறி, நெல் கொள்முதல் செய்வதை தாதமப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சாலைகளின் இருபுறமும் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்துகிடக்கும் அவல நிலை உருவானது.

இதை கண்டித்து வெள்ளிக்கிழமை சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் உடனடியாக அனைத்து விவசாயிகளின் நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் அலிவலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT