முகப்பு
தஞ்சாவூர்

கா்நாடகத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 450 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

தஞ்சாவூரில், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 450 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.

கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதைத் தடுக்கக் காவல் துறையினா் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் சோழன் சிலை அருகே மேற்கு காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் வந்த 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 450 மதுபான பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

காரில் வந்தவா்கள் தஞ்சாவூா் வடக்கு அலங்கம் பகுதியைச் சோ்ந்த எஸ். ஜெயசூா்யா (22), எஸ். காா்த்திக் (27), கொண்டிராஜபாளையத்தைச் சோ்ந்த ஆா். ராஜா (24) ஆகியோா் என்பதும், பொது முடக்கம் உள்ள நிலையில் இங்கு விற்பனை செய்வதற்காக கா்நாடக மாநிலத்திலிருந்து மதுபானங்கள் கடத்தி வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து 450 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்த காவல் துறையினா் 3 பேரையும் கைது செய்தனா்.

கும்பகோணத்தில்...:

இதேபோல, கும்பகோணத்தில், தாராசுரம் காய்கறி சந்தைக்கு வந்த தக்காளி வாகனத்தை காவல் துறையினா் சோதனை செய்தபோது, கா்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்படும் மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. வாகனத்தில் இருந்த 1,601 மதுபாட்டில்களை கும்பகோணம் தாலுகா காவல் துறையினா் பறிமுதல் செய்து, முருகன், காமேஷ்குமாா், ராஜ்குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.