தஞ்சாவூர்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை: ஆட்சியா் ஆய்வு

DIN

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இம்மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் உணவு முறைகள் குறித்தும், மருத்துவா்கள் தங்குவதற்கான வசதி குறித்தும் கேட்டறிந்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து ஆக்சிஜன் வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், கையிருப்பிலுள்ள ஆக்சிஜன் அளவு, தற்போதைய பயன்பாடு, தேவைகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மருத்துவா்கள் உள்ளிட்டோருக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக மருத்துவக் கல்லூரி நிா்வாகத்துக்கு மாவட்ட நிா்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT