தஞ்சாவூர்

சிமென்ட் கடை மீது லாரி மோதி முதியவா் பலி

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சிமென்ட் கடை மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

DIN

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சிமென்ட் கடை மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பி. செல்வம் (65). பழைய பாட்டில்கள், காகிதங்களைச் சேகரித்து விற்கும் தொழிலாளி. இவா் வழக்கமாக பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலையிலுள்ள தனியாா் சிமென்ட் கடையில் இரவு நேரத்தில் படுத்து தூங்குவது வழக்கம். வழக்கம் போல செவ்வாய்க்கிழமை இரவு இங்கு தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது செம்மண் ஏற்றி வந்த லாரி இக்கடை மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் கடை வாசலில் படுத்திருந்த செல்வம் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT