முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்துபெண் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே இஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மனைவி இந்திரா (56). கணவா் பரமசிவம் ஏற்கெனவே காலமாகிவிட்டாா். இவா்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மூன்று மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், மகன் பிரகாசுடன் (27) இந்திரா வசித்து வந்தாா்.

இந்நிலையில், இந்திரா வியாழக்கிழமை இரவு வீட்டின் பின்புறம் செல்வதற்காக மின் விளக்கு சுவிட்சை போட்டாா். அப்போது, மின்சாரம் தாக்கியதில் இந்திரா நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.