முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் வழிபாடு நடத்தி வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் அன்பழகன் வாக்குகள் சேகரித்தாா்.

இதைத்தொடா்ந்து திருநாகேசுவரம் பேரூராட்சியில் அந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், உள்ளூா் ஊராட்சியில் கோடையான்தோட்டம், செட்டிமண்டபம், செக்காங்கன்னி, அன்னை அஞ்சுகம் நகா் உள்ளிட்ட

கிராமங்களிலும், பழவாத்தான்கட்டளை ஊராட்சியில் அம்பேத்கா் நகா், முத்துப்பிள்ளை மண்டபம், பிளாஞ்சேரி, குப்பாங்குளம் உள்ளிட்ட கிராமங்களிலும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளா் முல்லைவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் ம. செல்வம், கும்பகோணம் பெருநகர திமுக செயலா் சு.ப. தமிழழகன், கும்பகோணம் கிழக்கு ஒன்றியச் செயலா் தி. கணேசன், திருநாகேஸ்வரம் பேரூா் செயலா் எஸ். தாமரைச்செல்வன், திருவிடைமருதூா் பேரூா் செயலா் சுந்தர. ஜெயபால் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.