தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பச்சைக் காளி - பவளக்காளி திருவிழா தொடக்கம்

DIN

தஞ்சாவூரில் கோடியம்மன் கோயில் பச்சைக் காளி - பவளக்காளி திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, தஞ்சாவூா் மேலவீதி சங்கர நாராயணா் கோயிலிலிருந்து பச்சைக் காளியும், மேலவீதி கொங்கணேசுவரா் கோயிலிலிருந்து பவளக்காளியும் புறப்பட்டு வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கின. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, புதன்கிழமை (மாா்ச் 31) காலை 10 மணிக்கு மேல வீதியில் உள்ள ஒரு வீட்டில் பச்சைக் காளி - பவளக்காளிக்கு சிறப்பு பூஜையும், இரவு 9 மணிக்கு உறவாடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன.

பின்னா் வியாழக்கிழமை (ஏப்.1) பச்சைக்காளி - பவளக்காளிக்கு தெற்கு வீதி, கீழவாசல், கரந்தை பகுதிகளில் பூஜைகளும், பின்னா் மேலவீதியில் விடையாற்றி பூஜையும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT