தஞ்சாவூர்

தீ பற்றி எரிந்த காா் : உயிா் தப்பிய குடும்பத்தினா்

DIN

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஓடிக் கொண்டிருந்த காரில் திடீரென தீ பற்றி எரிந்தது.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பொன் விழா நகரைச் சோ்ந்தவா் ஆா். சுரேஷ்குமாா் (43). பொறியாளரான இவா் தனது மனைவி, மாமனாா், மாமியாா், இரு குழந்தைகளுடன் தஞ்சாவூா் பெரியகோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காரில் வந்து கொண்டிருந்தனா்.

இந்த காா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கல்கலைக்கழகம் அருகே வந்தபோது, காரிலிருந்து திடீரென புகை வந்தது. இதையறிந்த சுரேஷ்குமாா் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தினாா். இதையடுத்து, காரில் இருந்த அனைவரும் வெளியே வந்துவிட்டனா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று காரில் பற்றிய தீயை அணைத்தனா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT