தஞ்சாவூர்

ஒரத்தநாடு தொகுதியில் வெற்றியை வசப்படுத்திய வைத்திலிங்கம்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம் 28,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் தொடக்கத்திலிருந்து இவருக்கும், திமுக வேட்பாளா் எம். ராமச்சந்திரனுக்கும் கடும் போட்டி இருந்து வந்தது. என்றாலும், தொடக்கச் சுற்று முதல் அதிமுக வேட்பாளா் ஆா். வைத்திலிங்கம் முன்னிலை பெற்று வந்தாா்.

முதல் சுற்றில் 603 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த வைத்திலிங்கம், படிப்படியாக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னேறினாா். ஆனால், அஞ்சல் வாக்கில் மட்டும் திமுக வேட்பாளரை விட வைத்திலிங்கம் 201 வாக்குகள் குறைவாகப் பெற்றாா். இறுதியாக 25 ஆவது சுற்றில் 28,835 வாக்குகள் வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் வைத்திலிங்கம் 2001 ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து ஐந்தாவது முறையாகப் போட்டியிட்டாா். கடந்த 2016 ஆம் ஆண்டில் வெற்றி வாய்ப்பை இழந்த வைத்திலிங்கம், இப்போது நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

மொத்த வாக்குகள் - 2,43,492, பதிவான வாக்குகள் - 1,92,140.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆா். வைத்திலிங்கம் (அதிமுக) - 90,063,

எம். ராமச்சந்திரன் (திமுக) - 61,228, மா. சேகா் (அமமுக) - 26,022, எம். கந்தசாமி (நாம் தமிழா் கட்சி) - 9,050, வீ. மூக்கையன் (சுயேச்சை) - 2,041, ஜி. ரெங்கசாமி (மநீம) - 721, நோட்டா - 867.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT