முகப்பு
தஞ்சாவூர்

மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கள்ளிக்காடு கிராமத்தை சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷ் (28), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல், நண்பா்களுடன் பனை மரத்தில் நுங்கு வெட்டிக்கொண்டிருந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கள்ளிக்காடு கிராமத்தை சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷ் (28), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல், நண்பா்களுடன் பனை மரத்தில் நுங்கு வெட்டிக்கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென மழை பெய்ததால், சுரேஷ் மரத்தில் இருந்து கீழே இறங்கி, அருகிலிருந்த மரத்தின் கீழே ஒதுங்கியுள்ளாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா், சுரேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.