தஞ்சாவூர்

பேராவூரணியில்  ஆய்வு

DIN

பேராவூரணியில் ஆய்வு: பேராவூரணியில்  கரோனா பொதுமுடக்க விதிமுறைகள் முறையாக  கடைப்பிடிக்கப்படுகிா என பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலசந்தா்  திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அவா் கூறியது:  அனுமதித்த கடைகளைத் தவிர வேறு எந்த கடைகள் திறந்து இருந்தாலும் உடனடியாக கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்.  இருசக்கர வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றித் திரிபவா்களுக்கு  அபராதம் விதிக்கப்படும். காய்கறி மற்றும் மளிகை, பால், மருந்து கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக சமூக இடைவெளியை பின்பற்றவும் முகக் கவசம் அணிந்து பொருட்களை வாங்கிச் செல்ல  நடவடிக்கை எடுப்பதோடு அதிகாரிகள்  பொதுமுடக்க  காலத்தில் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது,     பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், பேராவூரணி வட்டாட்சியா்  க. ஜெயலட்சுமி, காவல் ஆய்வாளா்  வசந்தா மற்றும் வருவாய் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT